எகிப்தில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரருக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

எகிப்து நாட்டில் டிரையத்லான் என்ற சர்வதேச தடகளப்போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றது. நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை கொண்ட இந்த போட்டியில் இந்தியா உள்ளிட்ட 32 நாடுகளை சேர்ந்த வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 19 வயதுக்குட்பட்டருக்கான பிரிவில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ரூயல் ஆர்தடர்ன் கலந்து கொண்டார். இதே போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 58 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் சிறப்பாக செயல்பட்ட ரூயல் ஆர்தடர்ன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

- Advertisement -

இந்த நிலையில் நாடு திரும்பிய ரூயல் ஆர்தடர்னுக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திருச்சி மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்து செல்வம், சார்லஸ், ரியாஸ், புதிய ஜெருசேலம் தேவாலயத்தின் பிஷப் பால் மற்றும் பெற்றோர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்