பாளையங்கோட்டை சிறையில் அதிர்ச்சி! போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை!
பாளையங்கோட்டை சிறையில் அதிர்ச்சி! போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை!

தென்காசி மாவட்டம், காசி தர்மம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் குமார் (வயது. 29). இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த மாதம் (செப்டம்பர்) 29-ம் தேதி முதல், பாளையங்கோட்டை மத்திய சிறையில், விசாரணைக் கைதியாக, அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைககப்பட்ட நாளில் இருந்தே, வினோத்குமார் மன உளைச்சலுடனும், விரக்தியுடனும் கணப்பட்டதாக, கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ( அக்டோபர். 14) காலையில், சிறையில் உள்ள குளியல் அறையில், தன்னுடைய துண்டைப் பயன்படுத்தி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக கைதிகளும், சிறைக்காவலர்களும் உடனடியாக வினோத்குமாரைஃமீட்டு, முதலுதவிகள் அளித்த பின்னர், சறை அதிகாரிகளின் மேற்பார்வையில், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியலையே, வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை முயற்சி மற்றும் மரணம் குறித்து, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சிறைத்தறை உயர் அதிகாரிகள் மற்றும் பெருமாள்புரம் காவல்துறையினர், சிறைக்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்


Comments are closed.