வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் தடுப்பு பணிகளை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு!
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் தடுப்பு பணிகளை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு!

வடகிழக்குப் பருவ மழை, துவங்கயுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, மழை நீர் ஓடைகளை தூர்வாரும் பணிகள், மழைநீர் செல்லும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகள் மற்றும் கழிவுநீர் ஓடையில் தேங்கியுள்ள, மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகள் ஆகியன, தற்போது நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள, திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலப் பகுதிகளிலும், மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, இன்று (அக்டோபர்.14) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.சுகுமார், தாமிரபரணி ஆற்றங்கரையோரம், கடந்த பருவமழைக் காலங்களில், அதிகம் வெள்ளம் பாதித்த பகுதிகளான, தச்சநல்லூர் மண்டலம் சி.என்.கிராமம், குறுக்குத்துறை, அண்ணாநகர், லெட்சுமிபுரம், கருப்பந்துறை மற்றும் கைலாசபுரம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்குப் பருவ மழைக்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழை நீர் தேங்கும் பகுதிகளை, தூர் வாரிடவும், மீட்பு பணிக்கான தளவாட பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இதுபோல மாநகராட்சி ஆணையாளரும், I.A.S. அதிகாரியுமான டாக்டர்.மோனிகா ராணா, பாளையங்கோட்டை மண்டலம், பழைய பேருந்து நிலையம், திருவனந்தபுரம் சாலையில், மழைநீர் வடிகால் ஓடையில், தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை காலத்திற்கு முன்பாக, மாநகர பகுதிகளில் உள்ள, அனைத்து மழைநீர் வடிகால் ஓடைகளிலும் குப்பைகள் மற்றும் மண் போன்றவற்றை அகற்றி, வெள்ள நீரானது தங்கு தடையின்றி செல்லும் வகையில், பணிகளை விரைந்து முடித்திட, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், அறிவுறுத்தினார். மேலும் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தச்சநல்லூர் மண்டலம், 2-வது வார்டு பகுதிகளான அழகநேரி, தாராபுரம், நியூகாலனி ஆகிய பகுதிகளில், கழிவுநீர் ஓடைகள், பாதாளச்சாக்கடை இணைப்புகள் மற்றும் சாலை சீரமைப்புகள் ஆகியவற்றை, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்துப் பணிகளையும், விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். தொடர்ந்து,
திருநெல்வேலி மண்டலம் தேவிபுரம், கீழரதவீதி, வீரவாஞ்சி நாதன் தெரு மற்றும், 15-வார்டில் பர்வதசிங்கராஜா தெரு, 18-வது வார்டில் நரிக்குறவர் காலனி, 19-வார்டு பேட்டையில் பங்களா தெரு, பாளையங்கோட்டை மண்டலம் 7-வது வார்டில், ஏஞ்சல் மருத்துவமனை பிரதான சாலை மற்றும் அங்குள்ள பெரிய ஓடை ஆகிய இடங்களில், மண் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டதை, அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின் போது,
உதவி ஆணையாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள். சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தூய்மைபணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.