திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுககளை பெற்றனர்!   

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுககளை பெற்றனர்!

 

Bismi

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளிலும், செவ்வாய்க்கிழமை தோறும், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில், இன்று (அக்டோபர். 14) “மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ தலைமை வகித்து, மாநகர மக்களிடமிருந்து, நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார். உதவி ஆணையர் நடராஜன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கப்பாண்டியன், அலெக்சாண்டர், சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், அழகர்சாமி, பிரசாந்த் ஆகியோர் துறை சார்ந்த அலுவலர்களாக, கலந்து கொண்டனர். மாநகராட்சியின், 5-வது வார்டு கவுன்சிலர் வே. ஜெகன் நாதன் கொடுத்த மனுவில், தனது வார்டுப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோணடப்பட்ட சாலைகள், பாதாள சாககடைப்பணிகள் முற்றிலும் முடிந்து விட்ட நிலையிலும் கூட, இன்னும் சீரமைக்கப்படாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 30-வது வார்டு கவுன்சிலர் சீதா அளித்துள்ள மனுவில், தன்னுடைய வார்டில் பல இடங்களில், மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை, உடனடியாக அப்புறப்படுத்த வேணடும்! என்று, வலியுறுத்தி உள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு, இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கிற பணப்பலன்களை, காலதாமதமின்றி கிடைத்திடச் செய்ய வேண்டுமென, 41-வது வார்டு கவுன்சிலர் சங்கீதா தன்னுடைய மனுவில், கோரிக்கை விடுத்துள்ளார். இவர்களைத் தவிர, அந்தந்த பகுதி மக்கள் சமர்ப்பித்துள்ள மனுக்களில், பாதாளச்சாக்கடை இணைப்பு இல்லாத இடங்களில், அவற்றை உடனடியாக நிறைவேற்றிடவும், மேடு பள்ளங்களைக் கொண்டதாக உள்ள மாநகராட்சி சாலைகளில், மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு நிலவுவதால், சாலைகளை சீரமைத்திடவும் கேட்டுக் கொண்டுள்ளனர். அனைத்து மனுக்களையும் பெற்ற துணை மேயர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படைத்து, கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து, ஆவன செய்யுமாறு உத்தரவிட்டார்.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்