காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்!

மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்!

மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

Bismi

திருநெல்வேலி,டிசம்பர் 17:-

தமிழக காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி புதன்கிழமை தோறும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்” நடைபெற்று வருகின்றன. அதன்படி,டிசம்பர். 17 புதன்கிழமை காலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது.இந்த முகாமில், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, துணை ஆணையர்கள் கிழக்கு வி. வினோத் சாந்தாராம், தலைமையிடம் எஸ்.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்களை பெற்றனர். மொத்தம் 14 பேர் மனுக்கள் கொடுத்தனர். இதுபோல, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பங்கேற்று, மனுக்களை பெற்றார். மொத்தம் 22 பேர் மனுக்களை கொடுத்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்