- Advertisement -

கள்ளக்குறிச்சி பாக்கம் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வாகை தமிழ்த்தாய் டிரஸ்ட் சார்பில் தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

Bismi

கள்ளக்குறிச்சி பாக்கம் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வாகை தமிழ்த்தாய் டிரஸ்ட் சார்பில் தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

Vagai

- Advertisement -

​இந்நிகழ்வில், வாகை தமிழ்த்தாய் அறக்கட்டளை (டிரஸ்ட்) சார்பில் பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளிப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

 

​இப்பரிசுத் தொகுப்பினை வாகை தமிழ்த்தாய் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திரு. பிரபுராஜ் அவர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

 

பண்டிகைக் காலத்தில் தங்களின் உழைப்பை அங்கீகரித்து வழங்கப்பட்ட இந்த உதவிகளைப் பணியாளர்கள் நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

 

வாகை தமிழ்த்தாய் அறக்கட்டளை இப்பகுதியில் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கி வருகிறது. மேலும், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தேவைகளை அறிந்து தொடர்ந்து கல்வி உதவிகளை நல்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

#Kallakurichi #KallakurichiNews #VaagaiTamizhThaiTrust #DiwaliCelebration #DiwaliGifts #SanitationWorkers #SocialService #TamilNaduNews #Deepavali2026 #CommunityService #EducationalSupport

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்