திருநெல்வேலி மாவட்டக் காவல்துறை சார்பாக, பாளையங் கோட்டையில் நடைபெற்ற, காவலர் தினம்! காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டக் காவல்துறை சார்பாக, பாளையங் கோட்டையில் நடைபெற்ற, காவலர் தினம்! காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு!

“தமிழ்நாடு காவலர் தினம், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி கொண்டாடப்படும்!” என, தமிழ்நாடு முதலமைச்சர், ஏற்கனவே அறிவித்திருந்தார். அவருடைய இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று (செப்டம்பர். 6) திருநெல்வேலி மாவட்டத்தில் , “காவலர் தினம்” கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வின் தொடக்கமாக, காவல் பணியில் தங்களுடைய இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு,

Bismi

திருநெல்வேலி ஒருங்கிணைந்த ஆயுதப்படை வளாகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் தலைமையில், திருநெல்வேலி மாநகர காவல், மேற்கு மண்டல துணை ஆணையர் டாக்டர் V.பிரசன்னகுமார், மாநகர காவல், கிழக்கு மண்டல துணை ஆணையர் V.வினோத் சாந்தாராம், மாநகர காவல் தலைமையிடத்து துணை ஆணையர்

S.விஜயகுமார் ஆகியோருடன், மாவட்ட , மாநகர காவல் அதிகாரிகள், மற்றும் காவல் ஆளுநர்களால், காவலர் நினைவு ஸ்தூபியில், மலர் தூவி “புகழ் அஞ்சலி” செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, “காவல் பணிக்காக, தங்களது இன்னுயிரை இழந்தவர்களின் தியாகங்கள் பற்றியும், காவல் பணியின் சிறப்பு பற்றியும், மாவட்ட காவல் கண்காணிபபாளர் சிலம்பரசன், விரிவாக பேசினார்.

மேலும், காவலர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள், சிறப்புகள் மற்றும் ஆயுதத் தளவாடங்கள் சம்பந்தமாக கண்காட்சியும் நடைபெற்றது .இந்த கண்காட்சியினை, பள்ளி மாணவ- மாணவிகள், மிகுந்த ஆர்வமுடன் பார்த்து, பயன் பெற்றனர். “காவலர் தினம்” தொடர்பான உறுதிமொழியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், அனைத்து காவல் அலுவலர்கள் மற்றும் ஆளினர்களால் எடுக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், காவலர் தினத்தை முன்னிட்டு, இது போன்ற “உறுதிமொழி” காவல் அலுவலர்கள் மற்றும் ஆளினர்களால் எடுக்கப்பட்டது. காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான நல்லுறவை பலப்படுத்தும் விதமாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, விளையாட்டுப் போட்டிகளும், நடத்தப்பட்டு, சிறப்பான இடம் பெற்றவர்களுக்கு, பரிசுகள் மற்றம் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்