இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக பண்ட் நியமனம்.

சுப்மன் கில் விலகல்?

இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக பண்ட் நியமனம்.
சுப்மன் கில் விலகல்?

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தவதாக அறிவித்தது.அதன்படி முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கரம் 31 ரன் எடுத்தார்.பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஜான்சென் பந்தில் பெவிலியன் திரும்பினார். 29 ரன்னில் வாஷிங்டன் சுந்தரும் 39 ரன்னில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தர். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் 3 பந்துகளை சந்தித்த நிலையில் கழுத்து வலி காரணமாக ரெட்டீர் ஹுர்ட் ஆகி வெளியேறினார்.

Bismi

நவம்பர் மாதத்தில் இதே (15-ந் தேதி) தேதியில் கடந்த 2023-ம் ஆண்டு உலக கோப்பை

அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 79 ரன்கள் எடுத்து ரெட்டீர் ஹுர்ட் ஆனார். அதேபோல 2 ஆண்டு கழித்து அதே நாளான நவம்பர் 15-ந் தேதி இன்றும் அவர் ரெட்டீர் ஹுர்ட் ஆகி வெளியேறி உள்ளார். இது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இப்போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்