தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் சார்பில் நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

0

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் சார்பில் நீதிக்கட்சியின் வைரத்தூண்
சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள செட்டியாபுரம் கிராமத்தில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து லா பட்டம் பெற்றவர். பிரிட்டிஷ் அரசுக்கு அறிவுரை கூறியவர். ரஷ்யா அதிபர் லெனினுக்கு நிகரான அறிவாற்றல் மிக்கவர். திராவிட நிழல் என்று பெரியாரால் புகழப்பட்டவர். பார்வகுல மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக வாழ்ந்தவர்.

Bismi

இவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை முதல்வர் முக.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த மணி மண்டபத்தில் உள்ள சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் அவர்களின் சிலைக்கு, இன்று தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பார்க்கவ குல சங்கத்தின் மாநில தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தின் பேரன்கள் ரமேஷ் என்கிற இம்மானுவேல், மார்ட்டின், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், மாநில பொதுச் செயலாளர் காசி விஸ்வநாதன், மாநில பொருளாளர் பத்மநாபன், திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.டி.எம். சந்திரசேகர், திருச்சி மண்டல தலைவர் தங்கராஜ், மாநில இணைச்செயலாளர் பி.சி.செங்குட்டுவன், ஆனந்த் மாணிக்கம், மாநில இளைஞரணி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து
நீதிக்கட்சியின் வைரத்தூண் என அழைக்கப்படும் சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்தின் மணிமண்டபத்தில் அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்