வன உயிரின வார விழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி – 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

ஆண்டுதோறும் அக்டோர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வன உயிரின வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. இயற்கையை பாதுகாக்கவும், விலங்குகள் மற்றும் காடுகளை காக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இவ்விழா ஒரு வாரகாலம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

- Advertisement -

அதன் ஒருபகுதியாக வன உயிரினங்களை காப்போம், இயற்கையை காப்போம், பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுப்போம் என்பதனை வலியுறுத்தும் விதமாக வனத்துறை சார்பில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. மிதிவண்டி பேரணியை மாவட்ட வனஅலுவலர் கிருத்திகா, டிஆர்ஓ அருள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய இந்த மிதிவண்டி பேரணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர் என 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்