திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17 வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய பகுதியில் கடந்த (6.9.25) அன்று பெய்த கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி சிவா மற்றும் சுகந்தி தம்பதியர்களின் மகள் கார்த்திகா (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று உயிரிழந்த குழந்தை கார்த்திகாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர் பாபு, வட்ட செயலாளர் மனோகர், மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Comments are closed.