கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டி – அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்!

0

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக, தெற்கு மாவட்ட மாநகர தொ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

Bismi

கூட்டமைப்பின் செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி மற்றும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொமுச பேரவை பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம், மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மராத்தான் போட்டியில் எட்டு முதல் 18 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் மற்றும் 12 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவர்களும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து முடி திருத்துவோர் சுமார் 400 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுமார் 500 பேருக்கு மளிகை பொருட்கள் ஆகியவற்றை அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்