கரூர் நெரிசல் சம்பவம் – இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் விஜய் இரங்கல்

கரூர் நெரிசல் சம்பவம் – இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் விஜய் இரங்கல்

 

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் கூட்ட நெரிசலில் அசம்பாவிதம்:

 

 

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசலில் ஆறு சிறுவர் சிறுமிகள் 16 பெண்கள் 9 ஆண்கள் என மொத்தம் 31 பேர் உயிரிழந்த நிலையில் 58 நபர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் மேலும் 20 நபர்கள் கவலைக்கிடமான நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்படும் பொழுது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் சென்னை சென்றார் தவெக தலைவர் விஜய்,

 

Bismi

அதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து பதிவு செய்திருந்தார் அதில்

 

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

 

முன்னதாக, கரூர் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி சீமான், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்