‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்று பாரதி கூற்றின்படி ஏழைக்கு இரக்கம் காட்டுவோம் பசித்தோருக்கு உணவளிப்போம்’-எழுத்தாளர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார்
‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்று பாரதி கூற்றின்படி ஏழைக்கு இரக்கம் காட்டுவோம் பசித்தோருக்கு உணவளிப்போம்’-எழுத்தாளர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார்

தமிழ்நாடு,நெல்லை மாவட்டம், தென்காசி கடையம் மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஜி.கே .பாஸ்கரன் ஆசிரியை ஜெபத்தாய் இணையரின் தவப்புதல்வர்
திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த பா.ஜான் ராஜ்குமார். புனைப்பெயர் புதுவை தமிழ் குமரன். இவர் 1986 ஆம் ஆண்டிலிருந்து எழுத்து பணியிலும், சமூக ஆர்வலராகவும் சமூக சேவை செய்து வருகிறார். உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி நெல்லை மாவட்டத்திலும், பி.ஏ.தமிழ் திருச்சி தேசிய கல்லூரியிலும், முனைவர் பட்டம் தஞ்சை வல்லத்தில் இருக்கக்கூடிய தமிழ் பல்கலைக்கழகத்தில் 2007 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். இவர் பாரம்பரிய சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் மருத்துவம், நோய் தீர்க்கும் காய்கறிகள், பாரம்பரிய மூலிகை மருத்துவம் போன்ற நான்கு நூல்களை எழுதி உள்ளார். ஆன்மீக நூலாக தேவ வல்லமை செய்திகள் என்ற நூலினை எழுதியுள்ளார். மேலும் 88 – 89 ஆம் ஆண்டில் குளித்தலை பாரதி, குளித்தலை சத்தியன், திருச்சி கவிஞர் முகிலன் ஆகியோரோடு முதல் பட்டிமன்ற பேச்சாளராக உருவாகி, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் போன்ற நிகழ்வுகளை கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கருத்துரை வழங்கி வருகிறார். உலகத்தமிழ் திருக்குறள் பேரவையுனுடைய நிறுவனராக இருந்து வருகிறார். திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை நிறுவனத் தலைவராக இருக்கிறார். ஐ.சி.எப்.பேராயத்தினுடைய பேராயர் தலைவராக இயங்கி வருகிறார். இவருடைய மனைவி பெயர் மனோகரி. மூத்த மகள் ஜெனிட்டா. மருமகன் பெயர் ஜான்சன். இளைய மகள் ஜாய் எஸ்தர். இவர் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து பொதுநலம் மற்றும் தன்னார்வ சேவையாற்றி வருகிறார். இவருடைய நோக்கம் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்று சொன்ன பாரதி கூற்றின்படி ஏழைக்கு இரக்கம் காட்டுவோம் பசித்தோருக்கு உணவளிப்போம். இயலாதாவருக்கு இயன்றதை செய்வோம் என்று செயல்பட்டு வருகிறார். கிறிஸ்துமஸ் புத்தாண்டு நாட்களில் சாலையோர வாசிகளுக்கு உணவு, உடை போன்றவைகளை வழங்கி வருகிறார். அது மட்டும் அல்ல திருச்சியில் காவல்துறை நண்பர்கள் குழுவினுடைய மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும். அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சிலுடைய திருச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.1988 ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையத்தில் இளைய பாரதம் நிகழ்ச்சியில் கை கொடுக்கும் கை என்ற தலைப்பில் பேசி உள்ளார். அதேபோல பொதுநல நோக்கோடு சன் டிவி, ஜெயா டிவி, மாலை முரசு டிவி, தமிழன் டிவி போன்ற தொலைக்காட்சியில் பேசி இருக்கிறார். திருச்சி தமிழ்ச் சங்கத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி விடாமுயற்சி என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றியுள்ளார். வரலாற்று நூல் ஆய்வு நூல்கள் 150 வெளியிட்டுள்ளார். குறிப்பாக முத்தரையர் நூற்றாண்டு சரித்திர சான்று ஆவணம், காமராஜர் 100 என்ற தலைப்பில் ஆய்வு தொகுப்பு, பத்திரிகை செய்திகள் நாவல்கள் போன்றவைகளை தொகுத்து 150 ஆய்வு நூலை தொகுத்து ஆய்வு கட்டுரை நூலாக வெளியிட்டுள்ளார். மேலும் பல பள்ளிகள் கல்லூரிகளுக்கு சென்று சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறார்.


Comments are closed.