வாக்களிப்பதற்காக வந்தேன் என் பெயர் இல்லை என்பது மன வேதனையாக உள்ளது – நடிகர் சூரி
நடிகர் சூரி மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய வாக்குச் சாவடிக்குள் சென்று திரும்பும் வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசியதாவது, என்னுடைய ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்தேன். கடந்த தேர்தல்களில் என்னுடைய வாக்கை பதிவு செய்தேன்.
ஆனால், இந்த முறை வாக்குச்சாவடியில் என்னுடைய பெயர் விடுபட்டுவிட்டது என்கிறார்கள், என் மனைவியார் பெயர் உள்ளது அவருக்கு வாக்கு உள்ளது.
என்னுடைய பெயர் விடுபட்டது என்கிறார்கள். இருந்தாலும் ஜனநாயக உரிமையை நிறைவேற்ற வந்தேன். அது நடக்கவில்லை எனும் போது மன வேதனையாக உள்ளது.
எங்கே எப்படி தவறு நிகழ்ந்தது என தெரியவில்லை. வாக்களிக்க முடியவில்லை என்ற வேதனையுடன் சொல்கிறேன். தயவு செய்து அனைவரும் அவரவரின் வாக்குகளை செலுத்தி விடுங்கள். நானும் அடுத்த தேர்தலில் என்னுடைய வாக்கை பதிவு செய்துவிடுகிறேன் என வேதனையுடன் சூரி தெரிவித்துள்ளார்.