வேளாண் இயந்திரங்கள் செல்ல உரிய பாதை இல்லாததால், திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 500 ஏக்கருக்கும் மேல் தரிசாக விடப்படும் விவசாய நிலங்கள் – விவசாயிகள் வேதனை!
விவசாயத்தில் உழவு, நடவு, அறுவடை என அனைத்து வேளாண் பணிகளும் இயந்திரங்கள் மூலமே பெரும்பாலும் நடைபெற்று வருகின்றன. இந்தலையில், காவிரி கிளை வாய்க்கால்களில் கடைமடை பகுதிகளில் உள்ள வயல்களுக்கு செல்வதற்கு பாதை இல்லாததால், வேளாண் இயந்திரங்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அந்த நிலங்களில் சாகுபடி செய்ய முடியாமல் தரிசாக போட வேண்டியுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்மாநில காங்கிரஸ் விவசாய அணி மண்டல துணை தலைவர் வயலூர் ராஜேந்திரன் கூறுகையில்,…
தமிழக முதலமைச்சர் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 மேட்டூர் அணையையும், ஜூன் 15 கல்லணையையும் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டத்தில் கட்டளை வாய்க்கால், புதிய கட்டளை வாய்க்கால், உய்யகொண்டான் வாய்க்கால், மேட்டு கட்டளை வாய்க்கால் இதுபோன்ற 17 கிளை வாய்க்கால்கள் மூலம் 1 3/4 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. ஆனால், பாசன வசதி பெறும் பல இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாதை இல்லாததால், வேளான் இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், சாகுபடி செய்யாமல் விளை நிலங்கள் தரிசாக விடப்படுகின்றன. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 8000 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக உள்ளது. வருவாய்த் துறையும் நீர்வளத் துறையும் புறம்போக்கு இடங்களை கையகப்படுத்தி, விவசாய தரிசு நிலங்களை வேளாண் இயந்திரங்கள் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தி தர வேண்டும். இதனால் இந்த தரிசு நிலங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
Comments are closed.