திருச்சி சனமங்கலம் அருகே எரிந்த நிலையில் கல்லூரி மாணவி சடலம் மீட்பு – மாணவி எரித்துக் கொலையா என போலீசார் விசாரணை.
திருச்சி சனமங்கலம் அருகே எரிந்த நிலையில் கல்லூரி மாணவி சடலம் மீட்பு – மாணவி எரித்துக் கொலையா என போலீசார் விசாரணை.
திருச்சி சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி,

இவர் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு திருச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். நேற்று வீட்டிலிருந்து இன்டர்வியூ செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர்கள் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மாணவியை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் அவரது மொபைல் எண்ணை ட்ராக் செய்த போது அந்த எண் சனமங்கலம் காட்டுப்பகுதியில் இறுதியாக அனைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அதிகாலை சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் பகுதியில் ஒரு இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது அதன் பெயரில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி எரிக்கப்பட்ட இடத்தில் கேக் மற்றும் மது பான பாட்டில்கள் அவரது காலணிகள் உள்ளிட்டவை இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சனமங்கலம் பகுதி காட்டுப்பகுதி என்பதால் அப்பகுதிக்கு மாணவி எப்படி சென்றார், எதற்காக சென்றார் அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் இந்த சிறுகனூர் பகுதிக்கு அருகே 10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மிளகாய் பொடியை தூவி கொள்ளை அடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்தில் சிறுவனூர் அருகே காட்டுப்பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எந்த குற்றமும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் குறிப்பிடத்தக்கது.


Comments are closed.