புல்லுருவிகள் யார் சொல்லி கொடுத்து இத்தகைய செயல்களை செய்கிறார்கள்- திரும்ப திரும்ப சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது. – திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆவேச பேச்சு
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் என் வாக்குசாவடி, வெற்றி வாக்குச்சாவடி எனும் தேர்தல் ஆலோசனை கூட்டம், கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்து. இந்த கூட்டத்தில், மாவட்ட திமுக அவை தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் மற்றும் A.அம்பிகாபதி தலைமையேற்றனர். மேலும் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் முன்னிலையில் வகித்தனர்.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள்
பழனியாண்டி, ஸ்டாலின் குமார்,
செளந்தரபாண்டியன் கதிரவன்
ஆகியோர் பங்கேற்றனர்.
திமுக முதன்மை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் இதில் கலந்து கொண்டு வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு, வாக்குசாவடி மட்டத்திலான திட்டங்கள் மற்றும் பிரச்சாரம் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்த கூட்டத்தில் பெரும்பாலான துறைகளின் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று கருத்துகள் பகிர்ந்துகொண்டனர்.
முன்னதாக மேடையில் பேசிய திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி கூறியது :
இந்த கூட்டம் மட்டும் அல்லாமல், தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இதை முதன்மை செயலாளர் கே. என். நேரு அவர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

கட்சியின் மாவட்ட செயலாளரை கூப்பிடாமல், படம் போடாமல், பெயரை போடாமல் செயல்படுவது, இதைப்பற்றி நான் திருப்பி திருப்பி சொல்வது வெட்கமாக உள்ளது.
இந்த பதவியில் இருக்கலாமா, அல்லது விட்டுட்டு போயிடலாமா என்று நினைக்கிறேன். கட்சி பொருத்தவரை ஆளுக்கு மரியாதை இல்லை, பதவி பொறுப்புக்கு தான் மரியாதை, ஒரு கூட்டம் நடத்துகிறார்கள் எனது சொந்த ஊரில் இவர்கள் எப்படி கட்சிக்காக பணியாற்ற போகிறார்கள் என்று வருத்தமாக உள்ளது.
தலைமை அனைத்து பணிகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் சிலருக்கு உறுப்பினர் அட்டை கூட இல்லை , அவர்கள் எப்படி இந்த பதவிக்கு வந்தார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் பெயரையோ, அல்லது யாரையோ அசிங்கப்படுத்துவதற்காக சொல்லவில்லை,
பொறுப்பு என்பது, முதன்மை செயலாளர் இந்த இடத்தில் இருக்கிறார் என்றால், நான் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும்.
அதேபோன்று தான் ஒன்றிய செயலாளர்கள் எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும். இந்த இயக்கம் ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்று சொல்கிறார்கள்.
அண்ணா, கலைஞர் ஆகியோர் இந்த கட்சியை கழகத்தை மிகுந்த கட்டுப்பாடுடன் வளர்த்திருக்கிறார்கள். இவர்களை மிஞ்சிய தலைவர் தான் நமது தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவார். இவரை தொடர்ந்து இன்னும் 50 ஆண்டு காலம் இந்த கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்த நமது துணை முதல்வர் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். என்பதை மார்பு தட்டி நாம் சொல்லலாம் வேறு எந்த கட்சி காரரும் சொல்ல முடியாது.
அப்படிப்பட்ட இயக்கத்தில் இது போன்ற சில புல்லுருவிகள் யார் சொல்லி கொடுத்து இத்தகைய செயல்களை செய்கிறார்கள். இதற்குக் காரணம் எனக்கு தெரிய வேண்டும்.
எனக்கு பதவி பெரிதல்ல, கருப்பு சிவப்பு வேஷ்டி கட்டிக்கொண்டு எந்த காலத்திலும் இந்த கட்சிக்கு துரோகம் வைரமணி செய்ய மாட்டான்.
நான் இறக்கும் போது என் மீது கருப்பு சிவப்பு கொடி போட்டிருந்தால் போதும் என்று எண்ணத்தில் தான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
இந்த கழகம் வெற்றி பெற செய்ய வேண்டும்.. என்றார்.


Comments are closed.