திருமயம் அருகே கணவனை கொன்று விட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக நாடகமாடிய பெண் கைது

திருமயம் அருகே கணவனை கொன்று விட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக நாடகமாடிய பெண் கைது

 

 

Bismi

திருமயம் தாலுகா மல்லாங்குடியை சேர்ந்தவர் பழனிவேலு(48). இவரது மனைவி மகாலெட்சுமி(42). இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். பழனிவேலு கார்பெண்டர் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடமாக பழனிவேலு உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்குச்செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன்,மனைவிக்கிடையே (இருவருக்கும்) அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் கணவரை மகாலெட்சுமி கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். பிறகு அவரை செப்டிக் டேங்கில் பிணத்தைப்போட்டு மண்ணால் மூடியுள்ளார். பிறகு எதுவுமே நடந்தமாதிரி தெரியாமல் அக்கம்பக்கத்தினரிடம் தன் கணவன் கோவையில் சிகிச்சையில் இருப்பதாக கூறியுள்ளார். 40 நாட்கள் ஆக பழனிவேலு நடமாட்டம் இல்லாததால் உறவினர்கள் கவலையடைந்தனர்.

தகவல் அறிந்தவுடன் பழனிவேலுவின் அக்கா காவேரி தன் தம்பி எங்கே என கேட்டதற்கு மகாலெட்சுமி முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவேரி இது குறித்து நமணசமுத்திரம் போலீசில் புகார்செய்தார். இன்ஸ்பெக்டர் உமாசங் கரி,சப்.இன்ஸ்பெக்டர் நதியா ஆகியோர் மகாலெட்சுமியிடம் விசாரித்தனர். விசாரணையில மகாலெட்சுமி உண்மையை கக்கினார். பழனிவேலுவின் உடல் வருவாய்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து போலீசார் மகாலெட்சுமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கணவனை கொன்றுவிட்டு மருத்துவசிகிச்சையில் இருப்பதாக நாடகமாடிய கல்நெஞ்சுப்பெண்ணை அப்பகுதி மக்கள் தூக்கில் போடுங்கள் என்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்