- Advertisement -

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக விவசாயிகளை திரட்டி பிரச்சாரம் – விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் அறிவிப்பு!

0

- Advertisement -

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Vagai
Bismi

மேலும் இந்த கூட்டத்தில்
விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும் , விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க வேண்டும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்ட கூடாது,
உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க வேண்டும், பாமாயில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு உள்நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில்….

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய மத்திய மோடி அரசை கண்டித்தும், விவசாயிகள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மோடிக்கு எதிராகவும் இந்தியா முழுவதும் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்