திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று அதிகாலை திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டு அங்கிருந்த பொது மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.







தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களிடம் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தனர். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேட்பாளர் கருப்பையா ஆகியோர் அங்கு வாலிபால் விளையாடி கொண்டிருந்தவர்களோடு வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்தனர். அதைத்தொடர்ந்து திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் சென்று நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இவர்களுடன் திருச்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழகத்தினர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.





**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.