நான் எந்தவித தவறும் செய்யவில்லை. திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக அமலாக்கத்துறை இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர் – அமைச்சர் நேரு பேட்டி
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில், “என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி” என்ற தலைப்பில் ஆலோசனைக்கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆலோசனைப்படி செயல்பட்டால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் நாளை திருவாரூர் நாகை மாயவரம், பெரம்பலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பேசுவதை கவனமாக கேளுங்கள் என்றார்.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, கதிரவன், ஸ்டாலின் குமார், சொந்தரபாண்டியன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்,…
*முறைகேடு குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளது என்ற கேள்விக்கு.,*

நாங்கள் ஏற்கனவே இதெல்லாம் பார்த்துவிட்டோம், சோதனை செய்து நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து விட்டன. எந்த அளவுக்கு உண்மை என பார்க்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. முறைகேடு நடந்துள்ளதா என காவல்துறை விசாரிக்க உள்ளனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக இதை செய்ய வாய்ப்பு உள்ளது. நான் எந்த தப்பும் செய்யவில்லை, அதனை நிரூபிப்பேன். தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சிகளுக்கு எங்களை விமர்சிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விசாரணையில் குற்றமற்றவர் என நிரூபிப்பேன்.
*டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்தது குறித்த கேள்விக்கு.*
ஏற்கனவே ஒன்றாக தான் இருக்கிறார்கள். நீண்ட காலமாக அவர்கள் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் நேற்று சேர்ந்து இருக்கின்றனர். திமுக B-டீம் என கூறும் எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு உள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்துதான் ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள்.
*SIR தொடர்பான கேள்விக்கு.,*
அரசு அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் sir குறித்து விழிப்புணர்வு அளித்து வருகிறோம். அதை எழுதி வாங்க ஒவ்வொரு கட்சியிலும் ஆள் இருக்கின்றனர்.
இறந்தவர்களை, வேறு ஊருக்கு சென்றவர்களை நீக்கினால் சரி, ஆனால் வாக்காளர்களை புதிதாக சேர்ப்பது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதை செய்தால் என்ன செய்வது. செய்யுங்கள் ஆனால் காலம் கடத்தாமல் செய்யுங்கள் என்றார்.


Comments are closed.