- Advertisement -

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்!

0

- Advertisement -

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் 38 மாவட்டங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டதிற்கிடையே மாநில தலைவர் முருகையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

Bismi

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக வைர விழா மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் 22 ,23 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றதாகவும், இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். குறிப்பாக இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் சங்கம் சார்பாக முன்வைக்கின்ற முக்கிய கோரிக்கையான மேம்பட்ட ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்களுக்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் கலந்து கொள்ளும் பட்சத்தில் மாநாடு நடைபெறும் இடத்திலேயே எங்களுடைய கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிப்போம் என்று கூறினார்.

Vagai

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்