தொலைந்து போன செல்போன்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன – திருநெல்வேலி
தொலைந்து போன செல்போன்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன – திருநெல்வேலி

திருநெல்வேலி:- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசனின் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P. முருகன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் V.ரமா தலைமையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கைபேசிகள் [CELL PHONES] தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 100 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு அவை அனைத்தும், இன்று [ஜூலை.24] காலையில், பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் முன்னிலையில், அதன் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட கைப்பேசிகளின் மதிப்பு 18 லட்சத்து, 18 ஆயிரத்து 873 ரூபாய் ஆகும். மேலும் காணாமல் போன அல்லது தவறவிட்ட கைப்பேசிகள் [செல்போன்கள்] தொடர்பாக, புகார் அளிப்பதற்காக, CEIR- Central Equipment Identity Register https://www.ceir.gov.in/ என்னும், இணையதள புகார் பிரிவு, இந்திய தொலைத் தொடர்பு துறையினரால், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.



இந்த இணையதளத்தில், புகார்தாரர் தன்னுடைய தொலைந்து போன அல்லது தவறவிட்ட செல்போன் தொடர்பான விவரங்களை, பதிவு செய்து புகார் அளிக்கலாம்! அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில், பதிவு செய்யப்பட்ட மனு ரசீது பதிவு செய்து, புகார் அளிக்கலாம். இவ்வாறு புகார் கொடுத்ததற்கு பிறகு, மனுதாரர் செல்போன் வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாதவாறு Block செய்யப்படும். மேலும், மனுதாரர் செல்போனில் புதிதாக சிம்கார்டு பயன்படுத்திய விபரங்கள் தொடர்பான அறிவிப்பும், மனுதாரருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். காணாமல் போன செல்போனை பயன்படுத்தி, பல குற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதால் தொலைந்த அல்லது காணாமல் போன செல்போன் குறித்து, உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தால், தொலைந்து போன அல்லது தவறவிட்ட செல்போனை, உடனடியாக மீட்க முடியும்! என பொதுமக்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக, பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு, புகார் அளிக்கலாம்! அல்லது https://cybercrime.gov.in/ என்ற இணைய தளத்திலும், புகார் அளிக்கலாம்! என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.





Comments are closed.