பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் (சிஐடியு) சார்பாக தர்ணா போராட்டம்!

- Advertisement -

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் (சிஐடியு) சார்பாக தர்ணா போராட்டம்!

 

- Advertisement -

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் ஓய்வு பெற்றவர்கள்,

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பனிமனை எதிரே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து TNSTC – திருச்சி கரூர் மண்டல தலைவர் சிங்கராயர் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் வாக்குறுதியின் படி அனைவருக்கும் பழைய பென்ஷனை வழங்க வேண்டும், உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும், 23 மாதமாக நிலுவையில் உள்ள ஓய்வு கால பலன்களை உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த உயர்வு, குறைந்தபட்ச பென்சன் உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சம்மேளனத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்ததாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்