திருமயம் போர்ட் ரோட்டரி சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பணி ஏற்பு விழா

- Advertisement -

திருமயம் போர்ட் ரோட்டரி சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பணி ஏற்பு விழா

 

 

- Advertisement -

திருமயம் போர்ட் ரோட்டரி சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பணி ஏற்பு விழா தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆளுநர் கார்த்திக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி மண்டல ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் துணை ஆளுநர் பார்த்திபன் சிறப்பு பேச்சாளர் யுகசரண் சிறப்பு பேச்சாளர் வள்ளியப்பன் திருமயம் போர்ட்ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் Rtn. PHF. PP. K. கபூர், தலைவர் Rtn. B. அன்புமணி செயலாளர்Rtn. M. பால்ராஜ் பொருளாளர்Rtn. SP. ராசு ஆகியோர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்துராஜா உயர்நிலைப் பள்ளிக்கு 5000 மதிப்புள்ள கேஸ் அடுப்பு நலத்திட்டமாக வழங்கப்பட்டது. கம்பங்குடி பட்டியில் உள்ள புனித மைக்கேல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பள்ளி குழந்தைகளுக்கு 27 ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு 12 ஆயிரம். நூலக வாசகர் வட்டத்திற்கு சிறந்த சமூக சேவை விருதும், அறிவு திருக்கோயில் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சிறந்த சமூக சேவை விருதும், Rtn. சபியுல்லா முன்னாள் ராணுவ வீரர் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருதும், தீரர் சத்தியமூர்த்தி நினைவு கிளைமூலக வாசகர் வட்டத்திற்கு சிறந்த சமூக சேவை விருதும், அரசு தலைமை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை விருதும், அரசு மருத்துவர் நெடுங்கிள்ளி அவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை விருதும் திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம் சார்பாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்