திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்

- Advertisement -

திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்

திருச்சி சுப்ரமணியபுரம் அருகே மத்திய சிறை அமைந்துள்ளது. அங்கு திருச்சி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது அவர் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரும் அங்கு தண்டனை கைதியாக இருந்து வருகிறார் இதற்கிடையே

- Advertisement -

சிறை நுழைவு வாயிலில் சிறப்பு அங்காடி கொண்டு செயல்பட்டு வருகிறது அங்கு உணவு பொருட்கள் உள்ளிட்டதை விற்பனை செய்யப்படுகிறது சிறை கைதிகளை கொண்டே அந்த உணவகம் நடத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று காலை அந்த உணவகத்தில் பணியாற்ற சிறை காவலர் தினேஷ் என்பவர் ராஜேந்திரன் மற்றும் ஐந்து கைதிகளை உணவகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கு பணியில் இருந்த பொழுது திடீரென ராஜேந்திரனை காணவில்லை. ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி உள்ளதாக தெரிகிறது இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து போலீசார் ராஜேந்திரனை தீவிரமாக தேடும்படி ஈடுபட்டுள்ளனர்.

சிறை துறை சார்பில் சிறைக்கு வெளியே உணவகம் அதேபோல பெண்கள் தனி சிறைக்கு அருகே பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது நன்னடத்தை கைதிகள் அங்கு பணிக்கு அமர்த்தப்படுவார்கள் அந்த வகையில் தான் சிறைக்கு வெளியே உள்ள உணவகத்தில் ராஜேந்திரன் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார் இந்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்