- Advertisement -

ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நடன போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திருச்சி மாணவர்கள் – மாவட்ட ஆட்சியர் வாழ்த்து!

- Advertisement -

ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி மாகாணத்தில் “கப் ஆஃப் காஸ்டஸ்” என்ற 15-வது சர்வதேச திருவிழா கடந்த 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நடைபெற்ற நடன போட்டியில் திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள மாஸ் சாம்ஸ் டான்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

5 முதல் 16 வயது, 16 முதல் 25 வயது மற்றும் 26 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் சாம்ஸ் அகாடமியை சேர்ந்த 12 மாணவர்கள், 11 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

Vagai

இதில் குறிப்பாக கட்டையாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவற்றில் நடனமாடி ஒட்டுமொத்த தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

Bismi

மேலும் இந்த போட்டியில் பல்கேரியா, அர்மேனியா, ஆஸ்திரியா, செக்குடியரசு, உக்ரைன், பெல்லாரஷ், அசர்பெய்ஜான், ஹங்கேரி போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தங்க பதக்கம் வென்ற டான்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவர்கள், அகாடமியின் இயக்குனர் சாம் தலைமையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்