- Advertisement -

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று வரும்போது தமிழகம் அதற்கு தயாராக இருக்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

- Advertisement -

மே தினத்தை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள கலைஞர் சிலைக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மே தின நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,..

Vagai

இந்த சமுதாயத்திற்காக உழைக்கக்கூடிய அனைத்து தொழிலாளர்களுக்கும், பத்திரிக்கை துறையை சார்ந்தவர்களுக்கும் மே தின வாழ்த்துக்களை, தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளது குறித்த கேள்விக்கு,..

Bismi

எப்போது ஆரம்பிப்போம், எப்போது முடிப்போம் என கூறாமல் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பீகார் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வர உள்ளது. தேர்தல் காலங்களில் இதுபோன்ற பல அறிவிப்புகளை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்து விடக்கூடாது. அதனை நடைமுறை படித்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்று வரும்போது தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கு தயாராக உள்ளார் என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு,..

திருச்சி மாவட்டத்தில் 104 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. தற்போது ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய சூழலில் தட்ப வெப்ப நிலையை பொருத்து பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தனியார் பள்ளிகள் கட்டணம் அதிகம் வசூலிப்பது குறித்த கேள்விக்கு,..

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது. 2009 இல் இருந்து முன்னாள் நீதிபதி தலைமையில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்