- Advertisement -

சென்னையில் ஆணையர் அலுவலகம் முற்றுகை – தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பு அறிவிப்பு!

- Advertisement -

தமிழ்நாடு கார் வியாபாரிகள் & ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பு மற்றும் திருச்சி மாவட்ட கார் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி பிராட்டியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வாகன வணிகர்களின் பல்வேறு பிரச்சனைகளை தமிழக அரசும், போக்குவரத்து துறையும் தீர்க்கவேண்டும் என வலியுறுத்தினர்.

Vagai
Bismi

தொடர்ந்து சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், …

2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான அரசு ஆணையின் படி, வணிகர்கள் வழங்கும் ஆவணங்களை தபாலில் உரிமையாளருக்கு அனுப்பும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். 1989 சட்டம் பிரிவு 430-ன் படி, உரிமை மாற்றம் மற்றும் கடன் பதிவு நீக்கல் உள்ளிட்ட பணிகளில் பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். உபயோகப்படுத்திய வாகனங்களுக்கு டிரேடர் சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் வணிகர்களை ஒன்று திரட்டி சென்னையில் ஆணையர் அலுவலகத்தை முற்றையிடும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கூடுதல் செயலாளர் தனபால், ராக்சிட்டி  இருசக்கர வாகன வியாபாரிகள் நல சங்க மாநில கவுரவ தலைவர் அறிவழகன், மாவட்ட தலைவர் சேகர், மாநில துணை செயலாளர் சேக் மொய்தீன், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் சரவணன் உள்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்