- Advertisement -

திருச்சி திருவெள்ளரை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் பங்குனி தேரோட்ட திருவிழா!

- Advertisement -

திருச்சி மாவட்டம் திருவெள்ளறை கிராமத்தில் உள்ள பங்கஜவள்ளி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவில் பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி புண்டரீகாட்ச பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து, திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ரெங்கா ரெங்கா, கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

Bismi

தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி பெருமாளை தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கோயில் முன்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் புறக்காவல் நிலையம் அமைத்து ஜீயபுரம் டிஎஸ்பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்