- Advertisement -

கண்ணாடி பேழைக்குள் உஷ்ட்ராசனா செய்து உலக சாதனை படைத்த திருச்சி மாணவி!

- Advertisement -

திருச்சி சமயபுரம் அருகே பழூரில் உள்ள எஸ்.வி.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாஸ்ட்ரி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் யோகா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திஷா (9) கண்ணாடி பேழைக்குள் தொடர்ந்து 20 நிமிடம் 30 வினாடிகள் உஷ்ட்ராசனா யோகாவை செய்து உலக சாதனை படைத்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு 8 நிமிடம் 1 வினாடி திறந்த வெளி மேடையில் உஷ்ட்ராசனா செய்து அசத்திய அஞ்சனா சுபாஷ் என்ற மாணவி செய்த சாதனையை, மாணவி திஷா முறியடித்ததுடன், கண்ணாடி பேழைக்குள் உஷ்ட்ராசனா யோகாவை செய்த சிறப்பை பெற்றுள்ளார். அதே மேடையில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ராகுல் (13) யோகாவின் சக்கராசனாவை 20 நிமிடம் 30 வினாடி செய்து உலக சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவர்கள் இருவருக்கும் சாதனைக்கான அங்கீகார சான்றிதழை மாஸ்ட்ரி உலக சாதனை தலைவர் பிருத்திவிராஜ் வழங்கினார். சாதனை படைத்த மாணவர் மற்றும் மாணவியை பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Vagai
Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்