- Advertisement -

வரும் தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்திக்கும் – ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்றோர் நலச்சங்கத்தினர் எச்சரிக்கை!

- Advertisement -

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பாக திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 12 ஆண்டுகளாக பணியின்றி அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து உரைசாரா பணியாளர்களாக அல்லல்பட்டு வருகிறோம். இதுவரை உண்ணாவிரதம், ஊர்வலம், மறியல், கண்டன போராட்டம் என 80க்கும் மேற்பட்ட போராட்டங்களை முன்னெடுத்து எந்த ஊரு தீர்வும் எட்டப்படவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி பெற வேண்டுமென்றால் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற அர்த்தமற்ற நிலை இந்தியாவிலேயே தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

Vagai
Bismi

இச்சூழலில் கடந்த காலத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த நியமன தேர்வு அரசாணை 149 என்பது இருள் சூழ்ந்த அரசாணை என்றும் அர்த்தமற்ற அரசாணை என்றும் இந்த தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் வன்மையாக கண்டித்தார். மேலும் 2013 TET ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி 177- ல் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தற்போது இந்த நியமன தேர்வையும் திமுக அரசு முற்றிலும் முரணாக இத்தேர்வை நடத்தியுள்ளது.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்து தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளது இம்முறை கேடுகள் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என உரிய ஆவணங்களோடு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நாங்கள் தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போதைய நியமன தேர்விலும் எண்ணற்ற முறைகேடுகள் நடந்துள்ளது.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் எங்களை வஞ்சித்து வருகிறது. ஆகையால் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் பரிசாக எங்களுடைய ரத்தத்தின் மூலம் எழுதி வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். இதுவரை சத்தமிட்டு சொன்ன நாங்கள் தற்போது இறுதியாக ரத்தமிட்டு சொல்கிறோம். எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் திமுக பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என எச்சரிக்கை விடுக்கிறோம் என தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்