- Advertisement -

கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள், உறுப்பினர் சேர்க்கை – கோலாகலமாக நடைபெற்ற “மமக பெருவிழா” !

- Advertisement -

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள், 500 புதிய உறுப்பினர்கள் இணையும் “மமக பெருவிழா” நிகழ்ச்சி தென்னூர் அண்ணாநகரில் மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் முன்னிலை வகித்தனர்.

Bismi

மமக பொது செயலாளரும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவருமான ப. அப்துல் சமது எம்.எல்.ஏ கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சால்வை அணிவித்தார். புதிதாக இணைந்த உறுப்பினர்கள் பொது செயலாளர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மமக துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் முகமது ரபீக், ஐ.டி விங் மாநில துணை செயலாளர் நஜீர், தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் மாவட்ட துணை செயலாளர்கள் இம்ரான் அசாருதீன் அப்துல் சமது, தமுமுக மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்