- Advertisement -

எல்.டி.டி.இ., அமைப்புக்கு ஆள் சேர்த்த புகார்; வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் விசாரணை

- Advertisement -

சென்னை: எல்.டி.டி.இ., அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் சென்னை க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Bismi

இந்தியா முழுவதும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு (எல்.டி.டி.இ.,) தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்திற்கு, ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதாக புகார்கள் வந்துள்ளது. இது குறித்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் சென்னை க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vagai

சென்னை கே.கே.நகரில் உள்ள பிரசாத் வீட்டில் லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த நவநாதன், இலக்கியன் ஆகிய இருவரை மாங்காட்டில் சட்ட விரோதமாக தங்க வைத்து உள்ளதாக, பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பிரசாத்திடம் போலீசார் விசாரித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்