- Advertisement -

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்: தமிழக ஜனதா தள மாநிலத் தலைவா் பேட்டி!

- Advertisement -

தமிழக ஜனதா தளத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ராஜகோபால் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்….

Bismi

வரும் ஜூலை 20-ஆம் தேதி காமராஜா் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தென்னூா் உழவா் சந்தையில் ஜனதா மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழக ஜனதாதளம் கட்சியின் அகில இந்தியத் தலைவா்கள் உள்பட பல்வேறு பிரிவு பங்கேற்கவுள்ளனா்.
மத்திய அரசு பல்கலைக்கழக மானியக்குழு சட்ட விதிகளை திருத்திய வரைவு அறிக்கையில், துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே வழங்கப்படுகிறது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இந்நிலை ஏற்பட்டால் பல்கலைக்கழகங்களை நிா்வகிப்பதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வரைவு அறிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகம் முழுவதும் அரசுக் கல்லூரிகளில் காலிப்
பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோா் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து தரப்பினருக்கும் சமநீதி கிடைக்க ஒரே தீா்வு சாதிவாரி கணக்கெடுப்புதான். அவற்றை நடைமுறைபடுத்த மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும். ஆடு வளா்க்கும் விவசாய குடும்பத்தினரை பாதிக்காத வகையில் வனத்துறை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு கால்நடை வளா்ப்போா் நல வாரியம் அமைக்க வேண்டும் என்றாா். இந்நிகழ்வில் மாநில நிா்வாகிகள் கே சி ஆறுமுகம்,வக்கீல்கள் ராஜசேகரன், வேங்கை சந்திரசேகா், சுப்பிரமணி, வையாபுரி, திருச்சி மாவட்ட தலைவா் அறிவழகன், நிா்வாகிகள் குப்புசாமி, காா்த்திகேயன், முருகானந்தம், வழக்குரைஞா் வினோத் குமாா், சிவா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்