- Advertisement -

பொங்கல் பரிசாக, 3,000 ரூபாய் வழங்க வேண்டும்- ஜிகே வாசன் கோரிக்கை!

- Advertisement -

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளது ஆலோசனை கூட்டம், கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

இயக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் நடந்துவருகிறது. அவர்களுக்கு உறுப்பினர் வழங்கப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் தமாக வின் குரல் வலுவானதாக இருக்கும்.

அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விசாரணையில் அரசு ஏதேனும் மறைக்க நினைத்தால் அதனை மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டுவது எதிர்க்கட்சிகள் கடமை.
ஜனநாயக ரீதியாக போராடுபவர்களை கைது செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை அரசு ஒடுக்கிவிட முடியாது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுகவிற்கு முட்டுக்கொடுக்கும் கூட்டணி கட்சிகளின் செயல் வெட்கக்கேடானது.

Vagai
Bismi

புயல், கன மழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப்பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும்.

தனியார்க்கு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் FL2 மதுபான கடை உரிமம் தருவதை அரசு நிறுத்த வேண்டும். பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் தமாகவின் நிலைப்பாடு.

இடைத்தேர்தல் வரும் போதெல்லாம் பொங்கல் பரிசாக அதிகளவு பணம் வழங்கிய திமுக அரசு தற்போது பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் வழங்காதது ஏற்புடையது அல்ல. எனவே, பொங்கல் பரிசு தொகுப்பில் அனைவருக்கும், 3,000 ரூபாய் வழங்க வேண்டும்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்