- Advertisement -

தமிழகத்தில் கைத்தறித்துறை தற்போது லாபத்தில் இயங்கி வருகிறது – திருச்சியில் அமைச்சர் காந்தி பேட்டி!

- Advertisement -

திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்ற வளாகத்தில் மாநில கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் கைத்தறி கண்காட்சி பொருட்கள் விற்பனை ஸ்டால்களை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Bismi

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கைத்தறித்துறை அமைச்சர் காந்தி…

Vagai

தமிழ்நாட்டில் கைத்தறி துறைக்கு அண்ணா, கலைஞரைப் போல் தற்போதைய முதலமைச்சரும் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கு முன்பு ஏழு கோடி வரை நஷ்டத்தில் இருந்த இந்த துறை தற்பொழுது நல்ல லாபத்தில் இயங்குகிறது. சென்ற ஆண்டு மட்டும் ரூ.20 கோடி லாபம் கைத்தறி துறையில் கிடைத்தது.
ஜிஎஸ்டியால் சில பிரச்சனைகள் கைத்தறி துறையிலும் உள்ளது. அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்