திருச்சியில் முஸ்லிம் மாணவ பேரவை சார்பில் மண்டல அளவிலான மீலாது விழா பேச்சுப் போட்டி – அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்!
முஸ்லிம் மாணவ பேரவை (MSF) சார்பில் மண்டல அளவிலான மீலாது விழா பேச்சுப் போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேச்சுப் போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் முஸ்லிம் மாணவர் பேரவை மாநிலத் தலைவர் திருச்சி ஏ.எம்.எச். அன்சர் அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜி.எச். ஹக்கீம், மாவட்டத் துணைத் தலைவர் எஸ். ஏ.எச.உமர்பாரூக், எம்.எஸ்.எப். மாநில பொருளாளர் எஸ்.சையது பாசித் ரஹ்மான், 51 வது வட்ட தலைவர் N.k.அமீருதீன் மற்றும் மாணவர் அணி அமைப்பாளர்கள் வா.மைதீன் சிராஜீதீன், முகமது இசாக், முகமது கௌஸ், முகமது இப்ராஹிம், முரளி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.