- Advertisement -

அமரன் திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் – திருச்சியில் திரையரங்கை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது!

- Advertisement -

காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களை குற்றப்பரம்பரையாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வெளிவந்துள்ள அமரன் திரைப்படத்தை கண்டித்தும், விடுதலை முழக்கமான ஆஷாதி என்ற முழக்கத்தை தீவிரவாத முழக்கமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை கண்டித்தும், அமரன் திரைப்படத்தை முதல்வர் பாராட்டியதுடன் அதில் காட்டப்பட்டுள்ள இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்களை நீக்க அறிவுறுத்தாததை கண்டித்தும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன்பாக முற்றுகை போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்றது.

Vagai
Bismi

அந்த வகையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி சோனா மீனா திரையரங்கை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து கல்லாகட்டும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்