திருச்சி கைலாஷ் நகரில் கலாலயா AB மழலையர் பள்ளி திறப்பு விழா – ஜனனி மகேஷ் திறந்து வைத்தார்!
திருச்சி காட்டூர், கைலாஷ் நகர், அண்ணா நகர் 10வது கிராசில் புதிதாக தொடங்கப்பட்ட கலாலயா AB மழலையர் பள்ளியை தொழிலதிபர் ஜனனி மகேஷ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார்.
இவ்விழாவில் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, மேலப்புதூா் புனித திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் மகளிா் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் லூா்துமேரி, ஜமால்முகமது கல்லூரியின் ஆயிஷா, மெட்ரிக் பள்ளி முதல்வா் காருண்யா, கலாலயா செயின் ஆஃப் நா்சரி நிறுவனா் திபீகா ராஜசேகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
காட்டூா் கலாலயா ஏபி மழலையா் பள்ளித் தலைவா் பரணி வரவேற்று, பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பேசினாா்.
Comments are closed.