- Advertisement -

திருச்சியில் வாரிசு சான்றிதழ் வழங்க மூன்றாயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!

- Advertisement -

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் ரத்தினகுமார் (40). இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக ரவிச்சந்திரன் பெயரில் வாரிசு சான்றிதழ் வேண்டி திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22.8.2024 அன்று விண்ணப்பம் செய்துள்ளார். காலமான ரவிச்சந்திரன் வசித்த திருச்சி பீமநகர் பகுதிக்கு உண்டான கோ.அபிஷேகபுரம் விஏஓ அலுவலகத்திற்கு இவரது விண்ணப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.

Bismi

ஒரு வாரம் ஆகியும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாதால் ரத்தினகுமார் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கோ.அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கே இருந்த விஏஓ செந்தில்குமார் (50) என்பவரை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு விஏஓ செந்தில் குமார் வாரிசு சான்றிதழ் கிடைப்பதற்கு தனக்கும் தனது உயர் அலுவலர்களுக்கும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் பெற்று தருவதாக கூறியுள்ளார். ரத்தினகுமார் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று கூறிய காரணத்தால், விஏஓ செந்தில்குமார் உங்களது மனுவை மேலே அனுப்பி விடுகிறேன், அதற்காக எனக்கு மட்டும் தனியாக 3000 கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரத்தினகுமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரத்தினகுமாருக்கு அளித்த ஆலோசனையின் படி இன்று மதியம் ரத்தினகுமார் செந்தில் குமாரிடம் இருந்து 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும், களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்