- Advertisement -

திருச்சி எடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி சீர் வழங்கும் விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0

- Advertisement -

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கலைமகள் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை,கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தலைமையாசிரியை தன லட்சுமி தலைமையில்
மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர், திருச்சி 62வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Vagai
Bismi


பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார்.
இந்த விழாவில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
எடமலைப்பட்டி புதூரில் இருந்து ராமச்சந்திரநகர் கலைமகள் பள்ளிக்கூடத்திற்கு மேளதாளத்துடன் பெற்றோர்கள் மாணவர்கள் ஊர்வலமாக கல்விசீர் எடுத்துச்சென்றனர்.
புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மாலை அணிவித்து கிரீடம் வைத்து பூ தூவி வரவேற்றனர்.


இந்த விழாவிற்கு வருகை தந்த கல்வி அலுவலர்கள் சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்களுக்கும் என அனைவருக்கும் உதவி ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

முன்னாள் மாணவி நதியா மற்றும் ஆசிரியர் ஆரோக்கியமேரி, சிறிய புஷ்பம், பெற்றோர்கள் மாணவர்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்