- Advertisement -

தனியார் பஸ்களில் சிசிடிவி கேமரா – திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்.

0

- Advertisement -

குற்றசம்பவத்தை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் தனியார் பேருந்தின் உரிமையாளர்களுடன் நடைபெற்றது.

அப்போது காவல் ஆணையர் பேசியபோது தனியார் பேருந்துகளில் நடைபெறும் திருட்டு,செயின்பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கும்,குடிபோதையில் பேருந்தின் நடத்துனர்,ஒட்டுனர் மற்றும் பொதுமக்களை தாக்குதல் போன்ற சம்பவத்தில் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள சிசிடிவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,
இந்த சம்பவங்கள் நடக்காமல் இருக்க பேருந்துகளில் சிசிடிவி கண்டிப்பாக பொருத்த வேண்டும்,
தனியார் பேருந்து ஒட்டுனர்கள் பேருந்துகளை அபாயகரமாக ஒட்டுவதை தவிர்க்க அறிவுரை கொடுக்கும்படியும் , பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் காவல்துறைக்கும் , பேருந்தின் உரிமையாளருக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது என தெரிவித்தார்.

Bismi
Vagai


மேலும் சட்டத்தை மதிக்காமல் செயல்படுவோர் மீது தகுந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்கள்.
அதனை ஏற்றுக்கொண்ட தனியார் பேருந்தின் உரிமையாளர்கள் பேருந்தில் சிசிடிவி பொறுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து விரைவில் பேருந்தில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை எடுப்பதாகவும் , குற்றவாளிகளின் புகைப்படத்தை நடத்துனரிடம் கொடுத்து குற்றம் நடைபெறா வண்ணம் பார்த்து கொள்வதாக தெரிவித்தனர் .
இந்த கூட்டத்தில் தர்மராஜ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் தர்மராஜ் , துணைவன் பஸ் சர்வீஸ் உரிமையாளர் மோகன் , மாரீஸ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்