- Advertisement -

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு!

0

- Advertisement -

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2024-24 ஆம் ஆண்டிற்கான தேர்தல், நீதிமன்ற ஆணைப்படியும், மாவட்ட பதிவாளர் அலுவலக அறிக்கையின் படியும் தலைமை தேர்தல் அலுவலர் செல்வராஜ், துணை தேர்தல் அலுவலர்கள் ராஜா, வெங்கடாசலம் ,தேர்தல் கண்காணிப்பாளர்கள் சரவணன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Vagai
Bismi

இதில் புதிய மாநிலத் தலைவராக பொறியாளர் வைத்தியநாதன், செயலாளராக சிவகுமார், பொருளாளராக மாரியப்பன், துணை தலைவராக புருஷோத்தமன், இணைச் செயலாளராக முனுசாமி, மண்டல செயலாளராக பொறியாளர் சிவகுமார், மாநில நிர்வாக குழு உறுப்பினராக பொறியாளர் தென்னரசு உள்ளிட்டோர் மாநில, மண்டல, நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் தேர்தல் அலுவலர்கள், புதிய நிர்வாகிகளிடம் அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர்.

மேலும் புதிய மாநில நிர்வாகிகள், பொறியாளர்களுக்கான கவுன்சில் அமைப்பதற்கு அரசிடம் முறையிடுவது, சென்னையில் நிர்வாக அலுவலகம் அமைக்க முயற்சிப்பது, பசுமை கட்டுமானங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது போன்ற பணிகளை விரைந்து செயல்படுத்த உள்ளோம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்