- Advertisement -

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

1

- Advertisement -

ஜனநாயகத்திற்கு எதிராகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, திமுக சட்டத்துறை சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் தலைமை வகித்தார். ஜாக் கமிட்டி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், திமுக தெற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிர் வழக்கறிஞர் பிரிவினர் மற்றும் முசிறி, துறையூர், மணப்பாறை, லால்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த திமுக வழக்கறிஞர் பிரிவினர் பங்கேற்றனர்.

Bismi

Vagai

தொடர்ந்து திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் ஓம் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்….

இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து முதல்வர்களிடமும் இது சம்பந்தமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டி இந்த புதிய மூன்று சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் பங்குபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து எட்டாம் தேதி திருச்சியில் அனைத்து வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டங்களை தொடர்ந்து இந்த மூன்று புதிய சட்டங்களும் ரத்து செய்யப்படவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்