- Advertisement -

சமயபுரத்தில் தமிழக அரசின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் – எம்எல்ஏ கதிரவன் துவக்கிவைத்தார்

0

- Advertisement -

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் சிறுகாம்பூர் அரசு மருத்துவமனை மற்றும் ஐந்து தனியார் மருத்துவமனையும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் சமயபுரம் மாரியம்மன் கோயில் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

Bismi


மருத்துவ முகாமினை மன்னச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன் துவங்கி வைத்து மக்களை தேடி மருத்துவம் மூலம் மருந்து மாத்திரை பெட்டகங்களையும் , கண்ணொளி காப்போம் என்ற திட்டத்தின் கீழ் கண் குறைபாடு உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கண்ணாடியும்,கர்ப்பிணி தாய்மார்கள், ஊட்டச்சத்து மருந்து பெட்டகம் தொழுநோய் மற்றும் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மருந்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்..  

Vagai

இதனைத் தொடர்ந்து சிறுகாம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் மதிவாணன் தலைமையிலான 8 மருத்துவர்கள் மற்றும் 30 சுகாதார பணியாளர்கள் இணைந்து 522 ஆண்களுக்கும் 735 பெண்கள் என மொத்தம் 1257 பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகள் வழங்கினார்.இதில் 3 நபர்களுக்கு கண்ணில் ஏற்பட்ட புரையை அகற்ற அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்   முகாமில் கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தகுமார் பேரூராட்சி தலைவர் சரவணன்,  ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்