சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து காவல்துறை விசாரிக்க நீதிபதி அனுமதி – நாளை மாலை 4 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவு!

0

தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்களை அவதூறு பரப்பும் வகையில் நேர்காணல் கொடுத்த சவுக்கு சங்கரை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று சவுக்கு சங்கர் கோவை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு. திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் இரு தரப்பினர் வாதத்தை கேட்டறிந்த நீதிபதி ஜெயபிரதா வழக்கை இன்று ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார். தொடர்ந்து சவுக்கு சங்கர் திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்று காலை லால்குடி சிறையில் இருந்த சவுக்கு சங்கரை காவல்துறையினர் பாதுகாப்புடன் திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சவுக்கு சங்கரை விசாரிப்பதற்காக ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க கோரினர்.

- Advertisement -

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜெயபிரதா யூடியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். 7 நாள் காவல் கஸ்டடி கேட்டிருந்த நிலையில், ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும். அதே சமயம் நாளை மாலை 4மணிக்கு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி ஜெயபிரதா உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லை சுரேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

மாவட்ட காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் கோடிலிங்கம் 7 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தது. கோவையில் இருந்து திருச்சி வரும் பொழுது தாக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அதற்கான உண்மை தன்மை அறியும் வரை போலீஸ் காவலில் வழங்கக் கூடாது என்றும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்ததின் பேரில் நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம்.
தொடர்ந்து நீதிபதி அவர்கள் இருதரப்பு வாதங்களை கேட்டு அறிந்து இன்று 4மணி முதல் நாளை மாலை 4 மணி வரை ஒரு நாள் போலீஸ்காவில் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவரை மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அல்லது எந்த வித காயமும் ஏற்படுத்தக் கூடாது எனவும், தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுக்க வேண்டும். இப்போது என்ன நிலையில் அழைத்து செல்கிறாரோ அதே நிலையில் திருச்சி அரசு மனு மருத்துவமனையில் பரிசோதனை செய்து அவரது உடல் நலம் குறித்து அறிக்கை பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 24 மணி நேரத்திற்குள் வழக்கறிஞர்கள் 3முறை அவரை சென்று பார்வையிடலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று அவர் கோவையில் இருந்து வரும் பொழுது தாக்கப்பட்டது குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. அது கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்