- Advertisement -

திருச்சி தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் கடும் சூறாவளி காற்றினால் 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்!

0

- Advertisement -

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் நேற்று இரவு கடும் சூறாவளி காற்று மற்றும் கன மழையினால் வாழை, வெற்றிலை, தென்னை, சோளம் உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் கடும் சேதமடைந்தன.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கனத்த மழை பெய்தது. இதில் காட்டுப்புத்தூர், மஞ்சமேடு, நத்தமேடு, சீலை பிள்ளையார் புத்தூர், ஸ்ரீராம சமுத்திரம், காடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1300 ஏக்கர் அளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் வாழைமரங்களில் 3 லட்சம் வாழை மரங்கள் வாழைத்தாருடன் ஒடிந்து விழுந்து சேதமானது. சுமார் ஐந்து ஏக்கர் அளவிலான வெற்றிலை கொடி பயிர்களும் பலத்த காற்றில் சாய்ந்து சேதமானது. மேலும் சுமார் 50 தென்னை மரங்களும் இரண்டு ஏக்கர் அளவில்சோள பயிர்களும் சேதமானது.

Vagai
Bismi

சேதம் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொலைபேசி வாயிலாக விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். கடும் வெயில் நிலவி வந்த நிலையில் திடீர் சூறாவளி காற்று கன மழையினால் பணப் பயிர்கள் பெரும் சேதம் அடைந்தது அப்பகுதி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நாளில் சில மணி நேரங்களில் ஏற்பட்ட சூறாவளி காற்று கடும் மழையினால் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்