சமயபுரம் பகுதியில் தொடரும் திருட்டு 6 கடையின் பூட்டை உடைத்து கைவரிசை மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு

0

சமயபுரம் பகுதியில் தொடரும் திருட்டு 6 கடையின் பூட்டை உடைத்து கைவரிசை மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை இருக்கிறது, அதன் அருகே இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை, எலக்ட்ரிக்கல் கடை, ஹார்டுவேர்ஸ் கடை இப்பகுதியில் இயங்கி வருகிறது.

இன்று காலை கடையை திறக்க வந்த கடைக்காரர்கள் தங்களது கடையின் பூட்டை உடைத்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது சிமெண்ட் கடை ரூ1300 மற்றும் பிளைவுட் கடையில் ரூபாய் 2500 டிராவை உடைத்து பணத்தை எடுத்துள்ளனர்.

- Advertisement -

இரண்டு நாட்கள் முன்பு இதே சிமெண்ட் கடையில் கடந்த ஞாயிறன்று சுமார் ரூ 50000 திருடிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து
6 கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

அதில் பொருட்கள் ஏதும் மற்றும் பணமும் அதிக அளவில் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இப்பகுதியில் எப்போதும் காலை முதல் இரவு வரை ஆள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வரும் நிலையில் நேற்று மே தினம் விடுமுறை தினம் என்பதால் இப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டை நடத்தி உள்ளனர். சமயபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது பகுதியில் தொடரும் திருட்டை பற்றி அச்சத்துடன் இருந்து வருகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து கடைக்காரர்கள் அனைவரும் புகார் அளித்ததின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்